சென்னை: எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வை எழுத உள்ள பட்டதாரிகளுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) கீழ் உள்ள மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெற, சிமேட் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
சிமேட் தேர்வு ஜன., 25-ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை https://exams.nta.ac.in/சிமேட் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011-4075 9000 என்ற எண்ணில் அல்லது cmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.