பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில், இலக்கிய மன்ற விழா பாரதி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. திருமலைச்சாமி தலைமை வகித்தார். தமிழ் துறைத்தலைவர் இணைப் பேராசிரியர் சி.இராணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, பட்டுக்கோட்டை ஏனாதி இராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பொ. சேகர், மாணவர்களுக்கு “உள்ள(த்)தை உயர்த்தும் ஆடி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்.ஜெ.உமா வரவேற்றார். நிறைவாக தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா.இராஜவினோதா நன்றி கூறினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் பா.சண்முகப்பிரியா தொகுத்து வழங்கினார்.
முதுகலை தமிழ் மற்றும் இளங்கலை தமிழ்த்துறை மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.