சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் பேரணியாக சென்றனர்.
ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் (சட்ட தினம்) பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மணிக்கூண்டு அருகே துவங்கிய பேரணி காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நிறைவடைகிறது. ஊர்வலத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் காந்தி, அம்பேத்கர் மற்றும் மாநில அரசைப் புகழ்ந்து பதாகைகள் மற்றும் தேசியக் கொடிகளை ஏந்திச் சென்றனர்.

ஊர்வலத்தின் முடிவில் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார் செல்வ பெருந்தகை. இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.