தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொது மேலாளரை மாற்றக் கோரி தஞ்சாவூரிலுள்ள கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளராக (நிர்வாகம்) ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இவர் சர்வாதிகார போக்குடன் தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும், பெண் ஊழியர்களை இரவு 9 மணி வரை பணியில் இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.
எனவே, அவரை இடமாற்றம் செய்யக் கோரி அனைத்து மாவட்டங்களிலுள்ள கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கக் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல, தஞ்சாவூரிலுள்ள கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கத்தினர், அனைத்து பணியாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அனைத்து தொழிற் சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.