தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 16 ஆவது மாநில மாநாட்டு வரவேற்புக்குழு இணைந்து, (அக்.30) வியாழக்கிழமையன்று, ‘கல்லூரி வளாகத்தில், உண்மை பேசுவோம், உரக்கப் பேசுவோம்’ என்ற தலைப்பில் வரலாறு- பண்பாடு குறித்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேராசிரியர் பக்தவச்சல பாரதி தலைமை வகித்தார். எழுத்தாளர் களப்பிரன் வரவேற்றார். ப.சத்தியநாதன், இரா.விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.தமிழ்ச்செல்வம், துணை முதல்வர் பேரா நா.பெரியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை பேராசிரியர் வீ.செல்வகுமார் ‘பொதுவெளித் தொல்லியல்’ என்ற தலைப்பிலும், தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் கி.இரா.சங்கரன், “உண்மையைத் தேடும் வரலாறு” என்ற தலைப்பிலும், சூழலியல் செயல்பாட்டாளர் எழுத்தாளர் நக்கீரன், ‘சுற்றுச்சூழலில் சமூகநீதி’ என்ற தலைப்பிலும்,
தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா.காமராசு, ‘தொன்மங்களை மீள வாசித்தல்’ என்ற தலைப்பிலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக, மேனாள் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் பேராசிரியர் இ. முத்தையா, ‘ஊடக சமூகமும் சமூக ஊடகமும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினர்.
பேராசிரியர் மருத்துவர் ச.மருது துரை துவக்க உரையாற்றினார். கணினி பயன்பாட்டில் துறை மூன்றாம் ஆண்டு மாணவி க.கண்மணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பாவெல் பாரதி, அ.பகத்சிங், தங்க.முனியாண்டி, ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.