குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கடைசி வாரத்தில் பழக் கண்காட்சி நடைபெறும். சீசன் நாட்களை தவிர, தினமும் 500 முதல் 3,500 சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

இதனிடையே, இந்த ஆண்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கோடை காலம் நெருங்கி வருவதால், பூங்காவிற்குள் உள்ள வேலிகள், நடைபாதைகள், கைப்பிடிகள் போன்றவற்றுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதேபோல் மார்ச் மாதம் நடப்பட்ட நாற்றுகளுக்கு தண்ணீர் தெளித்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.