சென்னை: சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க முகமையின் மூலம் “YouTube சேனலை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் 09.01.2025 முதல் 11.01.2025 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
“உங்கள் சொந்த YouTube சேனலை உருவாக்குதல், வீடியோக்கள் மற்றும் ஸ்லைடு காட்சிகளை உருவாக்குதல், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை ஒருங்கிணைத்தல், உங்கள் வாடிக்கையாளர் தளத்தை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு, ஆன்லைன் மார்க்கெட்டிங், டொமைன் பெயர் & ஹோஸ்டிங், இணையதள வடிவமைப்பு நுட்பங்கள், சைபர் குற்றக் கொள்கை மற்றும் விதிகள் பின்வரும் தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஆர்வமுள்ள, ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும், இப்பயிற்சி குறித்த விவரங்களை அறிய/ பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை எங்களை தொடர்பு கொள்ளலாம். 9080130299, 9080609808,9841693060 முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட திட்ட மேலாளர் மாவட்ட தொழில்துறை விழுப்புரம் மாவட்ட மைய மாநாட்டு அரங்கம், விழுப்புரம் மாவட்டம்; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் இப்பயிற்சி தொடங்கும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும், பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.