சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்க விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளுடன் மீனவர்கள் கடலுக்குள் சென்று வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பினர். இதனால் நேற்று காலை முதல் மீன் வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. தங்கமீன், வவ்வால், கொடுவா, பாறை போன்ற மீன்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டன.
ஆனால், மற்ற மீன்கள் வரத்து குறைந்ததால், கடந்த வாரத்தை விட விலை உயர்ந்து காணப்பட்டது. அதாவது கடந்த வாரம் கிலோ ₹300-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் நேற்று ₹450-க்கு விற்பனையானது. வெள்ளை வவ்வால் ₹900-ல் இருந்து ₹1100 ஆகவும், மட்டை ₹550-ல் இருந்து ₹650 ஆகவும், ஷீலா ₹400-லிருந்து ₹450 ஆகவும், இறால் ₹350-லிருந்து ₹500 ஆகவும், கடம்பா ₹300லிருந்து ₹500 ஆகவும் உயர்ந்தது. அதேசமயம், கொடுவா ₹550 முதல் ₹500 வரை குறைந்த விலையில் விற்கப்பட்டது.
மேலும் சில மீன்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. வஞ்சரம் கிலோ ₹1000-க்கு விற்கப்பட்டது. மீன் விலை சற்று அதிகரித்தாலும் அசைவ பிரியர்கள் அதை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்றனர்.