நம் நாட்டில், பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர்களாக பணிபுரியவும், முதுகலை ஆராய்ச்சி படிப்புக்கு, மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு 5 அறிவியல் பாடங்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நாடு முழுவதும் 326 மையங்களில் நடத்தப்பட்டது.இந்த தேர்வுக்கு மொத்தம் 2 லட்சத்து 38,451 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில், ஒரு லட்சத்து 74,785 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது.
விண்ணப்பதாரர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று அதன் விவரங்களைச் சரிபார்க்கலாம். இதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால், 011-40759000/ 69227700 என்ற எண்ணிலோ அல்லது csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொண்டு தகுந்த விளக்கம் பெறலாம். மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.