சென்னை: 10 ஆண்டுகளுக்கு லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டிடிஎப். வாசன் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பிரபல யூடியூபராக இருந்தவர் டி.டி.எஃப்.வாசன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காரணத்தினால். யூடியூபர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இதனை மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தில் டி.டி.எஃப் வழக்கை தொடர்ந்தார். இன்று அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.