சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தொல்லை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவின்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. 10-ம் தேதி வரை விவாதம் நடைபெறும். முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி நாளான 11-ம் தேதி விவாதத்திற்கு பதில் அளிக்க உள்ளார்.
சட்டப்பேரவையில் விவாதம் தொடங்க உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவை ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளார். இது தொடர்பாக வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே குறிப்புகளை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.