சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மதியம் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.
இதன் காரணமாக இன்று (செப்டம்பர் 10) முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதியில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.