சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அல்-காய்தா உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 15-வது பிரிவின் கீழ் பயங்கரவாதச் செயலுக்கான வரையறை பயங்கரவாதச் செயலைச் செய்வதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய வெளிப்பாடு ஒரு உடனடி பயங்கரவாத செயலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது பல ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கும் பொருந்தும் மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படுத்தப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிடுவது பல ஆண்டுகளாக நீடிக்கும். ஒரு குறிப்பிட்ட பயங்கரவாதச் செயல் அடையாளம் காணப்படாவிட்டாலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 18-வது பிரிவு பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாராவதையும் குற்றமாக ஆக்குகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பில், “பாகிஸ்தானுக்கு ஆயுதப் பயிற்சிக்காக பலர் சென்றதற்கு மனுதாரரே காரணம். பாகிஸ்தான் பயணத்தின் போது, மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் மற்றும் ஜமாத்-உத்-தவா தலைவர் ஆகியோரை சந்தித்தார். 2015-ல் பெங்களூரு சென்று தண்டனை பெற்ற கைதியை சந்தித்தார்.
அப்போது, இருவரும் தங்கள் அமைப்பின் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து விவாதித்தனர். அவர் தனது உரையில் நாட்டுக்கு எதிராகவும் புனிதப் போரைப் பற்றியும் ஆத்திரமூட்டும் வகையில் பேசினார். “அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து, நாட்டுக்கு எதிரான சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் முயற்சிகளை, பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்ற அடிப்படையில் புறக்கணிக்க முடியாது” என்றும் உயர் நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.