சென்னை: தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில், புதிய விதிமுறைகளை உருவாக்கி, ஆன்லைனில் அறிமுகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், நாமக்கல் கவிஞரின் கொள்ளுப் பேரனும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை இயக்குநருமான இரா. மனோன்மணி பேசியதாவது:- தமிழ் வார்த்தைகளின் பயன்பாடு குழந்தைகளிடம் இருந்து தொடங்க வேண்டும்.
பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வருங்காலத்தில் தமிழ் நிலைபெற வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கையில்தான் உள்ளது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே, அதாவது முன்பள்ளிக் கல்வியின் தொடக்கத்திலிருந்தே தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, தமிழ் மொழியின் மீது அன்பை வளர்க்க வேண்டும்.
வளர்ச்சித்துறைக்கு எங்கள் துறை சார்பில் கோரிக்கை வைக்கிறோம். அதாவது அரசாணைகள், துண்டு பிரசுரங்கள் அனைத்தும் தமிழில் வரவேண்டும். அனைத்து அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடை பலகைகள் தமிழில் மட்டுமே பெயர்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அகரமுடி இயக்குனர் வே.பிரபு நோக்கவுரையாற்றினார் பதிப்பாசிரியர் மா. பூங்குன்றன் திட்ட விளக்கவுரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புலவர்வெற்றியழகன், ரா.கு.ஆல்துரை, அ.மதிவாணன், சா.ராமு, நூல் விமர்சகர் மெய்ஞானி பிரபாகர பாபு, தி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.