சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதன் காரணமாக வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.