சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் – மங்களூர் சிறப்பு ரயில் உட்பட 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு ரயில் (06037) நாளை பிற்பகல் 3 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மங்களூர் சந்திப்பை அடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு வழியாக மங்களூர் சந்திப்பை அடையும்.
சிறப்பு ரயில் (06104) ஜனவரி 19-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.