தஞ்சாவூர்: திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம், சொற்பொழிவு, பட்டிமன்றம் அரசு உதவி பெறும் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பேரவை தலைவர் அரங்க முருகராசு தலைமை வகித்தார், செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார். பாடகர்கள் இளையராஜா, மோகன்ராஜ், கணேசன் ஆகியோர் தேசிய பாடல் பாடினர். தமிழ் நெறி குறித்து செயற்குழு உறுப்பினர் மருதமுத்துவும், செயலாளர் மோகன்தாஸ் இன்று ஒரு தகவல் குறித்தும் பேசினர்.
இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற தமிழர்கள் குறித்து காளிமுத்து, சுபேதார் மேஜர் தங்கவேலு, நாகராஜன், முருகானந்தம், அறிவன்ஆதி, செயற்குழு உறுப்பின் பஞ்சாபகேசன், கிருஷ்ணன், மணிவண்ணன் ஆகியோர் பேசினர். வாழ்க்கை என்பது சுகமா? சுமையா? என்ற தலைப்பில் பேராசிரியை சத்யா தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.
பொதுச்செயலாளர் கோவிந்தராஜன், அரங்க முருகராசு, பொருளாளர் சரபோஜி, தொன்போஸ்கோ ஆகியோர் பேசினார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் தொன்போஸ்கோ வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் பெரியசாமி நன்றி கூறினார்.