சென்னை: தங்கள் பற்றிய விபரங்களை இணையத்தில் பதிவு செய்யாதவர்களின் 70 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஏராளமானோர் இலவசமாக ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். அவர்களுக்குதான் அந்தப் பொருள்கள் செல்கிறதா என்பதை உறுதி செய்ய சுயவிவரத்தை e-KYC மூலம் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் அப்டேட் செய்ய அரசு கெடு விதித்துள்ளது.
ஆனால் இதுவரை 70 லட்சம் பேர் அப்டேட் செய்யவில்லை. அவர்கள் அதை செய்யவில்லையேல், ரேஷன் அட்டைகள் ரத்தாகும் என கூறப்படுகிறது.