சென்னை: சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல் பற்றி தெரிந்து இருக்கிறீர்களா. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் பொதுவாகவே மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுபவர்கள்தான். பெண்களுக்கு இருக்கக்கூடிய சக்தியை மேலும் வலுப்படுத்த, பெண்கள் தங்களுடைய இரு கைகளில் இந்த வளையலை போட்டுக் கொண்டாலே போதும்.
கண்ணாடி வளையல்கள், தங்க வளையல்கள், பஞ்சலோக வளையல்கள், பித்தளை வளையல்கள் என்று பலவகையான உலோகங்களில் செய்யப்பட்ட வளையல் இருக்கத்தான் செய்கின்றது.
இவைகளையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல், என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டது. இருப்பினும் பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை மகாலட்சுமி தன்னுடைய கையில் அணிந்து கொண்டிருப்பதாக வரலாறு சொல்கின்றது.