சென்னை: ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலையில் நம்மை சார்ந்தவர்கள் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் இருக்க லைஃப் இன்சூரன்ஸ் பெறுவது அவசியம். ஆனால், போதுமான தொகைக்கு பாலிசி எடுக்கவில்லை என்றால், இன்சூரன்ஸ் எடுத்தும் அவை பயனளிக்காமல் போகலாம். சரியான தொகையைக் கண்டறிந்து, உங்கள் குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
சரியான தொகைக்கு பாலிசி எடுப்பது தான். சிறந்த பாதுகாப்பை தங்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றால் அதற்கு பாலிசி பெறுபவர் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கவரேஜ் என்பது காப்பீட்டுக் கொள்கையின் படி ஒரு நிறுவனம் வழங்கக்கூடிய அதிகபட்ச நிதிப் பாதுகாப்பைக் குறிக்கிறது.
எனவே பாலிசி பெறும்போது போதிய கவரேஜைப் பெறாமல் இருப்பது, உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க போதுமானதாக இருக்காது. எனவே காப்பீடு செய்யப்படுவதன் நோக்கத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் சரியான கவரேஜ் தொகையைக் கண்டறிவது மிகவும் அவசியம்.