சென்னையில் மக்கள் பெரிதும் ரசித்த ‘டபுள் டக்கர்’ இரட்டை மாடி பேருந்துகள் மீண்டும் சாலைகளை அணிய உள்ளன. 1970-களில் அறிமுகமான இந்த பேருந்துகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு, தற்போது மின்சார முறையில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு சேவையில் இல்லாத இந்த பேருந்துகள், இப்போது புதிய வடிவத்தில் நகரத்தை அலங்கரிக்க வந்துள்ளன.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இந்த திட்டத்தை சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

முதற்கட்டமாக 20 மின்சார பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவை வாரநாட்களில் பயணிகளின் அதிகத் தேவை உள்ள வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த பேருந்துகள் உயரம் அதிகம் என்பதால், அவை அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் இயக்கப்படும்.ஒரு பேருந்து சுமார் 90 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
இதன்மூலம் பொதுமக்கள் மட்டுமல்ல, சுற்றுலா பயணிகளும் பயனடைவார்கள்.குறிப்பிட்ட நாட்களில், சுற்றுலா சேவையாகவும் இந்த பஸ்கள் பயணிக்கின்றன. முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரட்டை மாடி பேருந்துகள் கடந்த காலத்தில் சென்னை நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது.
இந்த பஸ்கள் மீண்டும் வருவது nostalgiya-வையும், நவீன வசதிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்பான முயற்சியாக இருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இவை, சுத்தமான சூழல் சார்ந்த நகர போக்குவரத்துக்கான ஒரு முக்கியப் படியாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளது.