சென்னை: கடல்நீரை நன்னீராக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் நாளை முதல் 26-ம் தேதி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- நெம்மேலி கடல்நீரை நன்னீராக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை முதல் 26-ம் தேதி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
21, 23, 25 ஆகிய தேதிகளில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, உத்தண்டி பகுதிகளிலும், 22, 24, 26 ஆகிய தேதிகளில் பெருங்குடி, பாலவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஒக்கியம்-துரைப்பாக்கம் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் குடிநீரை போதுமான அளவு சேமித்து வைக்க வேண்டும். அவசர காலங்களில் லாரிகள் மூலம் குடிநீர் பெற, வாரியத்தின் இணையதளமான https://cmwssb.tn.gov.in/ இல் பதிவு செய்யலாம்.

குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் சீராக தொடரும். இதைத்தான் சொல்கிறது. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர், கழிவுநீர் அகற்றும் வரி மற்றும் கட்டணத்தை நுகர்வோர் இம்மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். நீர் வழங்கல் வாரியத்தின் கிளை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் செயல்படும் சேகரிப்பு மையங்களில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள் மூலம் பணம் செலுத்தலாம்.
https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login மற்றும் இ-சேவை மையங்கள், சேகரிப்பு மையங்களில் QR குறியீடுகள் மற்றும் பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்றும் நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.