சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 15ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் இன்று (பிப். 10) முதல் 15ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனி மூட்டம் நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி, குறைந் தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல் சியஸை ஒட்டி இருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது.