விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சதுரகிரி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரியில் மலையேற்றம் அக்டோபர் 21-ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
ஐப்பசி மாதத்தில் சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.