சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பகல் நேரத்தில் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும். இரவு நேரத்தில் மட்டும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று (23ம் தேதி) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 2ம் தேதி வரை பகல் நேர புறநகர் ரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். அதே சமயம் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தபடி இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மட்டும் இயங்காது.
மாறாக சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். மேலும், சனி (27ஆம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28ஆம் தேதி) காலை மற்றும் இரவு புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
ஆக., 3 முதல் ஆக., வரை, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில், ஏற்கனவே அறிவித்தபடி, 14ம் தேதி வரை, புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.