சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் தொடர்பான பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
நகராட்சி கமிஷனராக பணி நியமன ஆணை பெற்ற துர்கா கூறுகையில், ”தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தால் நல்ல நிலைக்கு உயரலாம். அரசு பள்ளி, அரசு கல்லூரியில் படித்தேன். டி.என்.பி.எஸ்.சி., பயிற்சியின் போது அரசு . மையத்தில் பயிற்சியும் பெற்றேன்.
இப்போது ஒர்க் ஆர்டர் வாங்கப் போறேன். எனது தந்தை மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்தார். என் தந்தை நல்ல ஆடைகளை அணிந்ததில்லை, என் வளர்ச்சிக்காக அவர் இழந்தது ஏராளம். அவருக்கு நல்ல சாப்பாடு கூட கிடையாது. எனது தந்தை, தாத்தா அனைவரும் துப்புரவு பணியாளர்கள். நான் இன்று நகராட்சி ஆணையராக இருப்பதால், இன்றிலிருந்து நமது தலைமுறை மாற்றம் காணப்போகிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி,” என்றார்.இதுகுறித்து, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, “நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு தலைமுறையை முன்னேற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு என்பதற்கு துர்கா எடுத்துக்காட்டு. மீண்டும் சொல்கிறேன். “கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்றார்