சென்னை: தமிழகம் மற்றும் காசி இடையேயான கலாச்சார ஒற்றுமையை காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி வலுப்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:-
ஒரே இந்தியா, உச்ச இந்தியா என்ற உயரிய கருப்பொருளில் நேற்று தொடங்கும் மூன்றாவது காசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சி, தமிழகம் மற்றும் காசி இடையேயான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் என நம்புகிறேன். பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகளையும், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான ‘வேற்றுமையில் ஒற்றுமை’யையும் மேம்படுத்தும் நல்ல நோக்கத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்விழாவுக்கு வழிவகுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.