சென்னை: மின்சார வாரிய ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மின்சார வாரியம் தொழிற்சங்கங்களை அழைத்து அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிசம்பர் 2023 முதல் மின்சார வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். இது தொடர்பாக, சம்பள திருத்த பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்துவார்.

பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும். ஒவ்வொரு தொழிற்சங்கத்திலிருந்தும் மூன்று பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.