திண்டுக்கல்: செங்கோட்டையனின் உரை குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு எங்கள் முடிவு, அவரது கருத்து எங்கள் கருத்து என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரத்தின் பிறந்தநாளையொட்டி, திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
செங்கோட்டையன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் முடிவெடுப்பார். அவரது முடிவு எங்கள் முடிவு என்று அவர் கூறினார். திண்டுக்கலில் நடைபெற்ற கோபாலநாயக்கரின் 221-வது நினைவு நாளில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் நத்தம் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சி.சீனிவாசன், “ஒற்றுமை குறித்து அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் முடிவெடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது எங்கள் முடிவு. எடப்பாடியின் கருத்துதான் எங்கள் கருத்து” என்றார்.