தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .
விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொங்கல் வைத்து விழா சிறப்பாக நடைபெற்றது.

வல்லம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கெளரவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், பேரூராட்சி துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங்.இரா.அன்பழகன், சுந்தர்ராஜ், ஆரிப் பாட்சா, ரவுலத்நிஷா , துப்புரவு ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் , பணியாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.