சென்னை: தமிழக அரசியல் சூழலில் அதிமுகவுடனான உறவில் தனிப்பட்ட பிரச்சனை இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த செய்தியால் பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை கூறுகையில், தமிழகத்தில் அரசியல் சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. எந்த கூட்டணியில் இருந்தாலும் கட்சி தலைமைதான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்அ.தி.மு.க.வுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, இருப்பினும் மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, நீட் போன்ற பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன,” என்றார்.
மேலும், தமிழகத்தில் பாஜகவை தனியாக வளர்ப்பதே எங்களது நோக்கம்அந்த நோக்கத்திற்காக அனைத்து முயற்சிகளும் தொடரும் எனினும், கூட்டணி எங்கு, எப்போது, ஏன் நடைபெற வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.
2026ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாக்குகள் குறைந்துள்ளதை நினைவூட்டிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலை விட திமுகவின் வாக்கு வீதமும் குறைந்துள்ளது என்றார். அதிமுக-பாஜக கூட்டணி குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. பாஜக மூத்த தலைவர்கள் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லி தலைமையகம் மட்டுமே இறுதி முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சும், அதிமுகவின் கருத்தும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது