விருதுநகர் : விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
விருதுநகர், சின்னவாடி பகுதியில் இயங்கி வரும் சக்தி பட்டாசு ஆலையில், இன்று (பிப்.5) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் சிலர் ஆலைக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்கும் பணியில், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், ஜன. 5ம் தேதி பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.