கரூர்:கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனபோதையில் விட்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் சுபாஷ் சந்திர போஸ் இரவு இவரது வீட்டுக்குள் 4 அடி நீள நல்ல பாம்பு திடீரென புகுந்தது.
இதனால் பதட்டமடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்புத்துறை படை வீரர்கள் வீட்டிற்கு புகுந்த பாம்பினை பிடித்து சாக்கு பையில் அடைத்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.