சென்னை: அக்டோபர் 31-ம் தேதி தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசு கொண்ட பச்சை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதி பெற்று அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுநலச் சங்கங்கள் மூலம் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்க முயற்சிக்க வேண்டும்.
அதே சமயம் அதிக சத்தம் எழுப்பும் மற்றும் தொடர்ந்து வெடிக்கக்கூடிய வெடிகுண்டுகள் தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதித் தலங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.