ராமேஸ்வரம்: ஜனவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு பயிற்சி நடத்துவதால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கை வடக்கு பிராந்திய கடற்படையினர் ஜனவரி 24 மற்றும் ஜனவரி 27-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்டின் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இலங்கை கடற்படையினர் யாழ் கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நாட்டின் அனைத்து மீனவ சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.