சென்னை: குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை திருமா பயிலகம் வரும் 27-ம் தேதி முதல் நடத்துகிறது. இதுகுறித்து, திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:- சென்னை அசோக் நகரில், அம்பேத்கர் திடலில் இயங்கி வரும், ‘திருமா பயிலகம்’ மூலம், அரசு பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை, கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். TNPSC மற்றும் SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திறமையான பயிற்றுனர்களுடன் 27-ம் தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கும்.
மேலும், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சியில் சேர நிறுவனத்தை தொலைபேசி (8610392275) அல்லது மின்னஞ்சல் (thirumapayilagam@gmail.com) மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.