சென்னை: கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும்.
முத்துப்போன்ற வெள்ளை பற்களை கொண்டவர்கள் அதனை முறையாக பராமரிக்காவிட்டால் பற்களின் நிறம் மாறத்தொடங்கிவிடும். வேறு சில பல் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில உணவு பொருட்களை கொண்டு பற்களின் வெண்மை நிறத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்:
வாழைப்பழ தோல்: வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதன் தோல்களுக்கு பற்களை வெண்மையாக்கும் சக்தி இருக்கிறது. தினமும் இரண்டு முறை வாழைப்பழ தோலை பற்களில் சில நிமிடங்கள் தேய்த்து வரலாம். அதில் இருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பற்களால் உறிஞ்சப்படும். அவை வெண்மை நிறத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும். ஆரஞ்சு பழ தோலையும் பற்களில் தேய்த்து வரலாம்.
ஸ்ட்ராபெர்ரி: சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. காலையில் எழுந்ததும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பற்கள் மற்றும் ஈறுகளில் 2 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்து விடலாம். அதன் பிறகு பல் துலக்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்குவதற்கு உதவும்.
அதுபோல் ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் நார்ச்சத்து இயற்கை சுத்திகரிப்பானாக செயல்பட்டு பற்களை தூய்மையாக வைத்திருக்க துணைபுரியும். குறிப்பாக வாய் மற்றும் பற்களில் படிந்திருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும்.
கேரட்: கேரட் கண்களுக்கு மட்டுமல்ல பற்களுக்கும் நலம் சேர்க்கும். தினமும் ஒரு கேரட்டை நன்றாக கடித்து மென்று சாப்பிட்டு வரலாம். அது பற்களில் படிந்திருக்கும் ‘பிளேக்’ எனப்படும் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்களை வெளியேற்றச்செய்துவிடும். கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும். ஈறு நோய் மற்றும் ஈறு அழற்சியையும் தடுக்கும். துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.