சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தலங்களில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பது குறித்து டாஸ்மாக் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பகுதிகளாக 7 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவீத பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் பாட்டில் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.
அதன்படி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவதை ஏற்கிறோம். மதுபாட்டில்களுடன் கூடுதலாக பெறப்படும் பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளான தண்ணீர் மற்றும் வன வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பாட்டில்களுக்குப் பதிலாக புதிய மூடியை வழங்குவதா அல்லது திருப்பித் தருவதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.