பரமக்குடி: பரமக்குடியில் 70க்கும் அதிகமான விநாயகர் சிலைகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று பொதுமக்கள் ஆற்றில் கரைத்தனர்.
பரமக்குடியில் 70க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, வைகை ஆற்றுப் படுகையில் நீர் நிரப்பப்பட்ட பள்ளத்தில் கரைக்கப்பட்டன. ஆட்டம்பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் உற்சாகமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்ற விநாயகர் ஊர்வலம், காவேரி துலாக்கட்டத்தில் நிறைவடைந்தது. 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்று உற்சாகமாக நடனமாடியபடி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், ஹிந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் செக்போஸ்ட் துவங்கி, ஆட்டம் பாட்டத்துடன் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று தலையூற்று அருவியில் கரைக்கப்பட்டன.