சென்னை: மோசடி செய்பவர்கள் கிப்லி எழுத்துக்கள் மற்றும் கலையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிப்லி கலையைச் சுற்றியுள்ள ஆபத்துக்களை பயனர்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.

நம்பத்தகாத மூலங்களிலிருந்து வால்பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் அல்லது ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டாம். அங்கீகரிக்கப்படாத தளத்தில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், அவற்றின் தரவு டீப்ஃபேக் மோசடிகளில் பயன்படுத்தப்படலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.