சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.