சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்.குறித்து தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதற்காக தெரியுங்களா?
மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டத்திற்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான போலி விண்ணப்பங்களை சிலர் விநியோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலி விண்ணப்பங்களை பணம் கொடுத்து வாங்கி மக்கள் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகங்கள் குறித்து அரசு அலுவலகங்களில் கேட்டு பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.