கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியை சாதி மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதுகலை தமிழ்த்துறை மாணவர்களிடம் பேசியபோது, பேராசிரியர் தகாத கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை காலவரையின்றி மூட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். விசாரணை நடத்தி வருவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், மாணவர்களின் போராட்டம் தொடர்வதால், கல்லூரி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.