பரமகுடி: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து பரமக்குடி அருகே வைகை ஆற்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் 22 பயணிகள் காயம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருகே தெளிசாத்தநல்லூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 காயமடைந்தனர். கிரேன்கள் மூலம் பேருந்தினை மீட்ட போது கிரேன் கவிழ்ந்ததில் ஆபரேட்டர் காயங்களின்றி தப்பினார்.
இந்த விபத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.