சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளிக்கு அக்டோபர் 20-ம் தேதி தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அந்த விடுமுறையை ஈடுசெய்ய அக்டோபர் 25-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.