சென்னை: பள்ளிகளில் மீண்டும் மாணவர் மனசு புகார் பெட்டி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் அடுத்தடுத்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வருவது மாணவ, மாணவிகள், பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண அரசுப் பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டியை மீண்டும் வைக்க அரசு பள்ளி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
2012இல் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து புகாரைப் பெற இந்தப் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல பள்ளிகளில் இது வைக்கப்படவில்லை. தற்போது இந்த மாணவர் மனசு புகார் பெட்டிகளை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புகார் பெட்டிகளில் மாணவர்கள் அளிக்கும் மனுக்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பார்வைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.