சென்னை: தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, “தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம் ஆலங்குளம் தொகுதியில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் கிரிவலப்பாதை அமைக்க அரசு நிதி வழங்குமா?” என மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இதற்கு பதிலளித்த கூறியதாவது:-

சித்தர்கள் வழிபட்ட தோரணமலை முருகன் கோவில், 900 அடி உயரத்தில் உள்ள, 3 கி.மீ., நீளமும், 10 அடி அகலமும் கொண்ட பாதை, இந்த பாதையை சீரமைக்க, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு போதிய நிதி வசதி இல்லாததால், பயனீட்டாளர் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது முடியாவிட்டால் கமிஷனரின் பொது நல நிதியில் இருந்து நிதி பெற்று 3 மாதங்களுக்குள் கண்டிப்பாக பணிகளை மேற்கொள்வோம்’’ என்று பதிலளித்தார்.