சிவகாசி: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று சிவகாசியில் பங்கேற்றவர்களிடம் கூறியதாவது:- பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கின்றனர்.

அதேபோல், தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாக்காளர்களாக மாற உரிமை உண்டு. கீழடியில் அகழ்வாராய்ச்சி மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்டது.
மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் உறவினரான அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.