சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மிதமானது முதல் கனமழை பெய்தது.
குறிப்பாக சென்னை நகரின் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, டி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதுதவிர சென்னை-திருவள்ளூர் மாவட்ட எல்லையோர பகுதிகளான முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.
மேலும், கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், தாம்பரம், மேடவாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.