சென்னை: தமிழகத்தில் 42,000 சில்லறை மற்றும் மொத்த மருந்தகங்கள் உள்ளன. கருத்தடை மருந்து, தூக்க மாத்திரைகளை மருத்துவர் சீட்டு இல்லாமல் வழங்குவது, வாங்கிய மாத்திரைகளுக்கு முறையான ரசீது தராமல் இருப்பது, ஆவணங்களை பராமரிக்காமல் இருப்பது என தெரியவந்தால் அவர்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுக்கிறது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சிறு கடைகளில் மட்டும் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களை கார்ப்பரேட் மருந்துக்கடைகள் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மருந்து வியாபாரிகள் கூறுகையில், “மருந்து கட்டுப்பாட்டு துறையின் தொடர் நடவடிக்கையால், 42 ஆயிரம் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவறு செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.ஆனால், சிறு குற்றங்களுக்கு கூட வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிப்பது, வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. பெரிய கார்ப்பரேட் மருந்துக்கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகளின் கடைகளில் மட்டும் தேவையற்ற சோதனை நடத்தி, அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.